1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி விவாதிப்பது இழிவான செயல் என்று

ஐக்கிய தேசிய கட்சியில் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமரால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனை இன்று விசேட அமைச்சரவையில் சஜித் பிரதேமதாச உள்ளிட்ட குழுவினரின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இது பொதுமக்களின் ஜனநாயக உரிமைக்கு அடியாக அமையக்கூடிய செயல் என்றும் அவர் காட்டமான முறையில் தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் ஓரிரு தினங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூடி வேட்பாளர் தொடர்பில் ஆராயும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி