1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

“அரசியல் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு ஒத்துழைப்பை வழங்க நான் தயார்” என முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கா தெரிவித்தார்

. “அத” பத்திரிகையின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஜெனரல் மஹேஷ் சேனநாயக்காவை நிறுவத்துவதற்கு தேசிய மக்கள் இயக்கத்தினால் (NPM) யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிய வருகின்றது.

நாட்டிற்குத் தலைமைத்துவத்தை வழங்குவதற்குத் தகுதியானவர்கள் தொடர்பில்  தேசிய மக்கள் இயக்கம் விரிவாக ஆராய்ந்துள்ளதோடு, அரசியல்வாதியல்லாத ஒருவராக மஹேஷ் சேனநாயக்காவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதன் நன்மை தீமைகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.  தேசிய மக்கள் இயக்கம் நிபுணர்கள் சிலர் ஒன்று கூடி உருவாக்கப்பட்டுள்ளதோடு நாட்டினுள் அரசியல் முறையினை மாற்றும் நோக்கில் அவர்கள் செயற்படுகின்றனர்.

இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிவீர்களா? என “அத” பத்திரிகையின் கேள்விக்கு முன்னாள் இராணுவத் தளபதி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“நான் இன்னமும் அவ்வாறான தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை. எவ்வாறாயினும் உரிய நேரத்தில் அது தீர்க்கப்படும். நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும். அரசியல் முறையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அவைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க நான் தயார். ஆனால் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரையில் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை”

“வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு சட்ட ரீதியான தடைகள் இல்லை”


“அத“ பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் theleader.lk கேட்ட கேள்விக்கு ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கா கூறும் போது, தேசிய மக்கள் இயக்கம் (NPM) பிரதானி ஒருவரான டாக்டர் வின்யா ஆரியரத்ன தனது பாடசாலை காலத்திலிருந்தே தனது நண்பர் என்றும், அரசியலுக்கு வருமாறு அவர் உள்ளிட்ட அந்த அமைப்பு தன்னிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாலும் அவ்வாறு செல்வது செயற்பாட்டாளர் ஒருவராகவா, தலைவர் ஒருவராகவா, நண்பராகவா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றும் கூறினார்.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் அரசியலுக்கு வருவதற்கு இராணுவ சட்டதிட்டங்களின் கீழ் எவ்வித தடைகளும் இல்லை என்றும் அவர் கூறினார். “செயற்பாட்டு இராணுவ சேவையில் ஈடுபட்டிருந்தாலும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எவரேனும் இராணுவத்தைச் சேர்ந்தவர் கோரிக்கை விடுத்தால் அதனை நிறைவேற்றுவதற்கு இராணும் கடப்பட்டிருக்கின்றது” என்றும் அவர் கூறினார்.

நாட்டில் கடுமையான அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், நாட்டையும், மக்களையும் நேசிக்கும் இலங்கையர் என்ற வகையில் வருங்காலங்களில் அதற்காக பாடுபடுவதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி