1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய தேசிய முன்னணியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர் குறித்து முடிவு செய்ய  ஐக்கிய தேசியக் கட்சியின்

செயற்குழு புதன்கிழமை (25) கூடி முடிவு செய்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர் குறித்து முடிவு செய்ய  ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு புதன்கிழமை (25) கூடி முடிவு செய்துள்ளது.இன்று பிற்பகல்  அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க இந்தத் தகவலை வெளியிட்டார்.


இதன்போது, ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.மேலும், ஒரு சில வேட்பாளர்கள் போட்டியிட முன்வந்தால் , ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தக் கோரிக்கையை  ஏற்றுக்கொள்ள முடியாதது என்று  தெரிவித்துள்ளார்.  ஐக்கிய தேசயிக் கட்சியின் யாப்பின்படி ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் செயற்குழுவுக்கு மட்டுமே உள்ளது என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி