1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தாமரை மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை வெற்றி பெற வைப்பதற்கு கூட்டு எதிர்கட்சியின் கட்சிகளை இணைத்துக் கொண்டு

புதிய கூட்டணி ஒன்றை அமைக்குமாறு விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்ற கட்சித் தலைவர் தொடர்ந்தும் விடுத்த கோரிக்கைகளை முற்றாகப் புறந்தள்ளிவிட்டு தாமரை மொட்டு கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தற்போது அவரது பரந்தளவிலான அமைப்புக்களின் ஊடாக ஜனாதிபதித் தேர்தல் பிரசார பணிகளை ஆரம்பித்துள்ளார்.

இதன் போது அவர் அவரது நெருங்கிய தோழர்களான சிரிபால அமரசிங்க மற்றும் ஜயந்த கெட்டகொட ஆகிய இருவரை டம்மி வேட்பாளர்களாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சிரிபால அமரசிங்க என்பவர் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதோடு, ஜயந்த கெட்டகொட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சரத் பொன்சேகாவின் கட்சிகளைப் பிரதிநித்துவப் படுத்தி பாராளுமன்ற உறுப்பினரா இருந்தவராவார். தற்போது அவர்கள் இருவரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்குவதற்காக தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண (தாமரை மொட்டு), ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் கூட்டணி அமைத்ததன் பின்னர் கோத்தாபய ராஜபக்ஷ அக்கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக தாமரை மொட்டுச் சின்னத்தில் நியமிப்பதற்கு கடந்த 11ம் திகதி பெசில் ராஜபக்ஷவினால்  எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஊடாக விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்திருந்த போதிலும் கடந்த 20ம் திகதி கோத்தாபயவுக்காக கட்டுப்பணம் செலுத்தியிருப்பது கூட்டணி அமைக்கும் கதையினை எந்த வகையில் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி