1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் திணைக்களத்தினால் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைக்காக இலங்கை இராணு வீரர்கள் ஈடுபடுவதைத் தடை

செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக foreignpolicy.com இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய லெப்டின் ஜெனரல் சவேந்திர சில்வாவை   இந்நாட்டின்  இராணுவத் தளபதியாக நியமித்தமைக்கு எதிர்ப்பைத் தெரிவித்து இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளரை மேற்கோள் காட்டி foreignpolicy.com இணையத்தளம்  வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் (2009) சவேந்திர சில்வா தலைமை வகித்த 58வது படையணி பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், இதன் மூலம் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வந்திருந்தது.

வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு அமைய ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆறு நாடுகளுக்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நன்றிகளைத் தெரிவிக்கும் அதேவேளை தற்போதைய இராணுவத் தளபதியின் நியமனத்துடன் அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் பிரச்சினைகள் தோன்றியுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் எண்டோனியோ குட்ரெஸ்ஸின் பிரதி ஊடகப் பேச்சாளர் பா்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கையின் படை வீரர்களின் காலம் நிறைவடைந்ததும் அடுத்த மாதத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் படையில் இலங்கை இராணுவத்தினரை ஈடுபடுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி