1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தெற்கு சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள் அளிக்கப்படப் போவது தீவிரவாதிகளின் கதைகளின் மீது அல்லாமல், 40 வருடகால திறந்த பொருளாதாரத்தினால்

கைவிடப்பட்டுள்ள, தொடர்ந்தும் துன்பங்களுக்கு உள்ளாகும் கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பதில் மாத்திரமேயாகும் என பிரபல அரசியல் விமர்சகரான குசல் பெரேரா கூறியுள்ளார்.

“ஜனாதிபதி தேர்தலின் புதிய பாதைக்காக” என்ற தலைப்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் கிராமிய மக்களின் எண்ணங்கள் சிந்தனைகளை நன்கு புரிந்து கொண்ட அண்மைய கால ஒரேயொரு ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவே என்றும், அவர் கிராமிய சமூகத்தை நெருங்கியது சிங்கள பௌத்த அரசியல் மற்றும் தேசப் பற்றைச் சுரண்டியல்ல என்றும் குசல் பெரெரா சுட்டிக் காட்டியுள்ளார்.

“ஜனாதிபதித் தேர்தலின் புதிய பாதைக்காக”

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில்  வெற்றி வேட்பாளருக்குத் தேவையானது புதிய அபிவிருத்திகளுக்கு அடித்தாளமிடும் வேட்பாளரே தவிற, எல்லோரும் பேசும், யாருக்குமே தேவையற்ற “தேசிய பாதுகாப்பு” மற்றும் சிங்கள பௌத்த நாட்டிற்காக வாக்குறுதியளிக்கும் வேட்பாளரல்ல என்றும் அவரது நீண்ட கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி