1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையின் பிரஜா உரிமையினை பெற்றுக் கொண்ட முறை சட்டவிரோதமானது

எனக் கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பேராசிரியர் சந்திரகுப்த தேவநுவர மற்றும் ஊடகவியலாளர் ஹத்கநுவர காமியி வியன்கொடை ஆகியோரை இலக்கு வைத்து அச்சுறுத்தல் விடுக்கும் பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரிமாறப்பட்டு வருகின்றன.

வெள்ளிக்கிழமை (04) மேன்முறையீட்டு தீர்ப்பின் மூலம் குறித்த இருவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு அவர்கள் இருவரையும் இலக்கு வைத்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், பேராசிரியர் சந்திரகுப்த தேவநுவர மற்றும் ஊடகவியலாளர் காமினி வியன்கொடை ஆகியோர் தாக்கல் செய்த மனுவை ஏனமானதாக தள்ளுபடி செய்து தமது தீர்ப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற மண்டபத்தினுள் இருந்த சிலர் கைகளைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்யத் தொடங்கினர்.

இச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி யசந்த கோதாகொட, இதற்கு எவரேனும் சட்டத்தரணிகள் தொடர்புபட்டிருந்தமை தெரிய வந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவித்தார்.

அச்சந்தர்ப்பத்தில் கோத்தாபய ராஜபக்ஷவுக்காக ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்திரணி ரொமேஷ்  த சில்வா, நீதிமன்றத்தினுள் அவ்வாறு நடந்து கொண்டமை தொடர்பில் மன்னிப்புக் கோரியதுடன் இது இடம்பெற்றிருக்கக் கூடாத செயற்பாடு என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பேராசிரியர் சந்திரகுப்த தேவநுவர மற்றும் ஊடகவியலாளர் காமிய வியன்கொட ஆகிய இருவரையும் இலக்காக் கொண்ட கருத்துக்கள் எச்சரிக்கை முன்னறிவிப்பு வரையில் வளர்ந்திருக்கின்றது.

கலைஞர் ஒருவராக காட்டிக் கொள்ளும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவருக்கு மிக நெருக்கமானவரான மதுமாதல அரவிந்த தனது முகநூல் பக்கத்தில் பேராசிரியர் சந்திரகுப்த தேவநுவர மற்றும் ஊடகவியலாளர் காமிய வியன்கொட ஆகியோருக்கு மறைமுகமான வகையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி