1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இன்று (08) மாலை பொலனறுவை வெலிகந்தை பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவைச் சந்தித்துள்ள அப்பிரதேத்தின்

பெருமளவிலான  ஸ்ரீ.ல.சு.கடசியின் செயற்பாட்டாளர்கள், எக்காரணம் கொண்டும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவுடன் இணைய வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமக்கு கிராமங்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் பல்வேறு துன்பங்களை ஏற்படுத்தியும், தொல்லைகளை வழங்கியும் வருவதாகவும், ஸ்ரீ.ல.சு.கட்சியின் சில செயற்பாட்டாளர்களின் உயிர் கூட இல்லாமல் போவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும் அவர்கள் அழுகையுடன் ஜனாதிபதியிடம் கூறியிருப்பதாகத் தெரிய வருகின்றது. இதன் போது ஜனாதிபதி தனது கட்சிக் காரர்களின் அச்சத்தைப் போக்குவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ.ல.சு.கட்சி மொட்டு கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமா என்ற விடயம் தொடர்பில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் போது அவர்களுள் பெரும்பான்மையினர் மொட்டுக் கட்சியுடன் இணைய வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.  கட்சியை மொட்டுவிடம் பலி கொடுத்து விட வேண்டாம் என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் வினயமாகக் கேட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி