1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றாலும், கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றாலும் ஒரு வருடத்திற்குள் வீட்டுக்கு அனுப்புவதற்கு

சிலர் செயற்பட்டு வருவதாகவும்,  அவர்களது முயற்சி சஜித்தையும், கோத்தாபயவையும் தோற்கடிப்பதே என்றும் “தேசிய சிந்தனையின்” பிரதானி பேராசிரியர் நலின் த சில்வா தெரிவித்தார்.

“நாம் இந்த முயற்சியைத் தோற்கடிப்போம். நாம் சஜித்தைத் தோற்கடித்து கோத்தாபயவை ஜனாதிபதியாக்குவோம்” என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.  பேராசிரியர் நலின் த சில்வா “தேசிய சிந்தனை” அமைப்பின் “காலம்” என்ற முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டே இதனைத் தெரிவித்துள்ளார்.

“கோத்தாபயவின் ஜனாதிபதி பதவியைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள அந்த குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“நமது நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது உண்மையே. 1978ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன முன்வைத்து நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பு நாட்டுக்கு தீங்கானது. அது இந்நாட்டு கலாசாரத்திற்கு. வரலாற்றிற்கு ஒத்துப் போகும் அடிப்படையிலான அரசியலமைப்பாக இல்லாததே அதற்கு காரணமாகும். அது செல்வநாயகத்தின் மருமகனான ஜே. வில்சன் உள்ளிட்டவர்களினால் பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசியலமைப்பின் அடிப்படையில தயாரிக்கப்பட்ட ஒன்றாகும் என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி