1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மொட்டுவைத் தோற்கடிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்

குமார வெல்கம தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் வேட்பாளர் ஒருவர் போட்டியிடாததால் வாக்களிக்கும் போது சரியான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு அவர் ஸ்ரீ.ல.சு.கட்சியினரிடத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இவ்வாறு கூறினார்.

ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாத நிலையில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபயவுக்கு ஆதரவை வழங்குகின்றனர்.  இது தொடர்பில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் குமார வெல்கம உள்ளிட்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் அதிகமானோர் “நாம் ஸ்ரீலங்கா” என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்கியது இவ்வாறான பின்னணியிலாகும்.

இன்று இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றிய குமார வெல்கம, ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுவைத் தோற்கடிக்க வேண்டும் எனத் தெரிவித்த போதிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவிக்கவில்லை.

“எமது கட்சியைப் பாதுகாக்க வேண்டுமாயின் நல்ல புத்திசாதூர்யமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்”

மொட்டு ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெற்றால் ராஜபக்ஷ ஒருவர் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவராக வந்துவிடுவார் என்றும் குமார வெல்கம கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி