1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரச புலனாய்வுச் சேவையினால் (SIS) மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்புக்களுக்கு அமைய தத்தமது வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக சஜித் பிரேமதாச

மற்றும் கோட்டாபய ஆகியோரின் சமூக ஊடக அணியினரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கதைகள் முற்றாக பொய்யானதாகும்.

ஜனாதிபதிக்கு மாத்திரம் பொறுப்புக் கூறுவதற்கு கட்டுப்பட்டிருக்கும் அரச புலனாய்வுச் சேவை (SIS) யினால் தேசிய தேர்தல்களின் போது மக்கள் கருத்துக் கணிப்புக்களை மேற்கொண்டு அரச தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிப்பது சம்பிரதாயமாக இடம்பெற்று வருவதோடு, இம்முறை அவ்வாறான கருத்துக் கணிப்பீட்டினை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியிடமிருந்து அனுமதி வழங்கப்படவில்லை.

எவ்வாறாயினும் பிரதான இரண்டு வேட்பாளர்களின் சமூக ஊடக அணிகளால் அரச புலனாய்வுச் சேவை மற்றும் NIB (NIB என்ற பெயரில் எந்த ஒரு பிரிவும் இதுவரையில் செயற்படவில்லை)  சேவையினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு அறிக்கை எனத் தெரிவித்து பல அறிக்கைகள் சமூக வலைத்தளங்களில் பரவ விடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி