1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டி நிலவுவது சர்வாதிகாரி ஒருவருக்கும், உண்மையான மக்கள் பிரதிநிதி ஒருவருக்குமிடையிலேயே என்றும், மக்களின் உண்மையான

தலைவர் சஜித் பிரேமதாசவே என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரன தெரிவித்துள்ளார்.  theleader.lk விற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“இன்று இந்த நிமிடம் வரையில் இந்தத் தேர்தல் ஜனநாயகம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் ஒரு தேர்தலாக மாறியிருக்கின்றது. அது மாத்திரமல்ல, மறுபக்கத்தில் நோக்கினால்  பாசிசம் தொடர்பில்,  பாசிசவாதத்தை சமூகத்தினுள் ஊன்றச் செய்கின்ற தேர்தலாகவும் ஆகியிருக்கின்றது.

இந்த தேர்தல் மிகவும் முக்கியமான சந்தர்ப்பமாகும். காரணம் ராஜபக்ஷக்கள் இரண்டு தசாப்தங்களாக போட்டியிடும் சந்தர்ப்பத்திற்கு வந்திருக்கின்றார்கள். 2015ம் ஆண்டில் ராஜபக்ஷக்களைத் தோற்கடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. எனினும் மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான தேர்தலாக இது மாறியிருப்பது தலைவிதியாகும்.

இந்நாட்டு மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவின் புறத்திலிருந்து தற்போது கருத்தொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் இரண்டு குவியல்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்று தேசப்பற்றாளர்களாகவும், மற்றையது நாட்டுக் எதிராகச் செயற்படும் அணியாக சுட்டிக்காட்ட முடியும் ” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி