1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அமெரிக்காவின் திறைசேரி திணைக்களத்தின் தேசிய வருமான வரிச் சேவையினால் வெளியிடப்படும் அந்நாட்டின் குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டவர்களின்

புதிய பெயர் பட்டியல், அதாவது 2019ம் ஆண்டின் நவம்பர் மாதப் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்ட அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டவர்கள் இனிமேல் அமெரிக்காவுக்கு வருமான வரி செலுத்த மாட்டார்கள் என அந்தப் பெயர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பெயர் பட்டியலிரும் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனவே கோட்டாபய இன்னமும் அமெரிக்காவுக்கு வருமான வரி செலுத்தும் அமெரிக்க பிரஜையாகும். அவர் தனது குடியுரிமையினை நீக்கிக் கொண்டிருந்தால் இப்போது வெளியிடப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலில் அவரது பெயர் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.  அப்போதுதான் குடியுரிமை சட்டரீதியாக விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கும்.

அமெரிக்காவில் குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்ட அனைவர் தொடர்பான பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை வெளியிட அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படுவது வருடத்திற்கு நான்கு தடவைகள் அவ்வாறான பட்டியல் வெளியிடப்படும் என்பதேயாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி