1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எதிர்வரும் ஜனாதிபதித்

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் இன்று (28) முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி வேட்புமனுத்தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்க்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சில நாட்களுக்கு முன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 

இதன்போது ஜனாதிபதி வேட்புமனு தொடர்பில் எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாலும் இணக்கப்பாடு இன்றி பேச்சுவார்த்தை முடிவடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவதற்காக கட்டுப் பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்புக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தரப்புக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் யார், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கட்சி ரீதியாக ஆதரிப்பார்களா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படாத நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றமையும் விசேட அம்சமாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி