1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளது. அதன் பிரதிநிதிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு உதவுவதாக அறிவித்ததனையடுத்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குழுவினர் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவுவதாக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வாவும் அமைச்சர் மஹிந்த அமரவீரவும் அறிவித்துள்ளனர்.
 
தயாசிறி ஜயசேகர ஜன பலவேகவின் வேட்பாளருக்கு உதவவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் 31ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என  அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 
சம்பிரதாயமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தமது குழு எனவும் கட்சியின் தலைமையகம் தமது குழுவின் கட்டுப்பாட்டில்  இருப்பதால் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என சிலர் கூறுவதை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி