1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

துபாயில் கைது செய்யப்பட்ட

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் "மன்னா ரமேஷ்" என அழைக்கப்படும் ரமேஷ் பிரிஜானக இன்று (29) அவிசாவளை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

ஒரு வழக்குக்காக அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்
 
தற்போது மன்னா ரமேஷ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதியுடன் அவரது தடுப்புக் காலம் முடிவடையவுள்ளது.
 
சந்தேக நபரின் தடுப்புக் காலம் முடிவடையும் தினத்தில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க, சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பிடியாணை அடிப்படையில் துபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் மன்னா ரமேஷ், மே மாதம் 7 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
 
அவிசாவளை பிரதேசத்தை மையமாக கொண்டு வர்த்தகர்களிடம் கப்பம் பெறுதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலை செய்ததாக மன்னா ரமேஷ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி