1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மொனராகலை மாவட்ட பொது

வைத்தியசாலையில் புதிய அடுக்குமாடி கட்டிடத்தை நிர்மாணிக்கும்போது ஏற்பட்ட விபத்து காரணமாக பல குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புதிய அடுக்குமாடி கட்டிடத்துக்கு இயந்திரம் மூலம் கொங்கிரீட் இட முயற்சித்தபோது  ​​கட்டுமான கட்டிடத்தை ஒட்டியுள்ள சிறுவர் பிரிவுக் கட்டடத்தின் மேற்கூரையில் கலவையான கொங்கிரீட் அடுக்குகள் வீழ்ந்து மேற்கூரை உடைந்தது.
 
அப்போது அங்கிருந்த  பல குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் மீது உடைந்த கொங்கிரீட்  துண்டுகள் வீழ்ந்துள்ளன.
 
இன்று (30) காலை இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக மூன்று தாய்மார்கள் மற்றும் மூன்று குழந்தைகள் மருத்துவ  சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 
விபத்து காரணமாக குறித்த பிரிவில் உள்ள அனைத்துக் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் தற்போது வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளரிடம் கேட்டபோது, ​​எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்தார். 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி