1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொது பாதுகாப்பு அமைச்சர்

டிரான் அலஸுக்கு பாதாள உலகத்திலிருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

அமைச்சர் டிரான் அலஸின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு புலனாய்வு பிரிவு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளதாகவும் அதே வட்டாரங்கள் கூறியுள்ளன.
 
பாதாள உலகத்தையும் போதைப்பொருளையும் ஒடுக்குவதற்கான தொடர் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்குவதும், பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதும் அமைச்சர் மீது பாதாள உலக அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
எத்தனை பாதாள உலக அச்சுறுத்தல்கள் வந்தாலும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கை நிறுத்தப்படாது என அமைச்சர் டிரான் அலஸ்  தெரிவித்திருந்தார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி