1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு பிற்போடப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க கட்சியின் அரசியல் குழு கடந்த திங்கட்கிழமை தீர்மானித்தது.

இரண்டு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று அறிவித்திருந்தது.

இதனையடுத்து எழுந்துள்ள நிலைமைகள் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அடுத்தவாரம் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் அரசியல் பீட தீர்மானத்துக்கு மாறாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தீர்மானித்துள்ளது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்து தெரிவித்துள்ளார்.

"பொதுஜன பெரமுன இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமா அல்லது தோற்க வேண்டுமா என்று எனக்கு புரியவில்லை. அதனால்தான் பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க முடிவு செய்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு வேட்பாளரை முன்வைக்க மிகவும் தவறான முடிவை எடுத்ததுள்ளது. இந்த நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்கள் மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி