1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

குற்றப் புலனாய்வுப் பிரிவின்

முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொல்ல சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் நீதிமன்றில் 

உண்மைகளை விளக்குமாறு பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன, தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம்  அழைப்பாணை  அனுப்பியுள்ளது.

ஷானி அபேசேகரவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய முன்வைத்த வாதங்களை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், எதிர்வரும்  9ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு  அழைப்பாணை அனுப்பியுள்ளது .

மேல் நீதிமன்ற நீதிபதிகளான விஜித் மலல்கொட,  முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது .

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் , தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு ஷானி அபேசேகரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, தனது கட்சிக்காரரை வாகன விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், அவரது உயிருக்கு ஆபத்துள்ளது .

தனது சேவையாளருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி  பாதுகாப்பை அதிகரித்து அவரது உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றில் கோரியுள்ளார் .

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி