1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் கட்சியின் உயர்பீடத்தின் முடிவை தலைவர் ஹக்கீம் அறிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக இன்று (4) கட்சியின் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தின் முடிவில் தலைவர் ரவூப் ஹக்கீம் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நாங்கள இன்று இந்த உயர்பீடக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் வருகை தராத நிலையில், அவரும் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு இணங்குவதாக  அவர் அறிவித்திருந்திருந்தார்.
 
இன்றைய கூட்டத்தில்  கிழக்கு மாகாண  முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும் எங்களுடன் உடனிருந்தார். 
 
ஏனைய அனைவரும் ஏகமானதாக ஏற்றுக் கொள்வதாக உத்தரவாதம் அளித்திருந்தனர்.
 
அதேவேளை இந்தக் கட்சியினுடைய உயர்பீடம் நீண்ட நேரம் பல விடயங்களை கலந்துரையாடி, மக்கள் எதிர்பார்க்கின்ற சகல விடஙங்களுக்கும் சரியான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதோடு எமது சமூகம் சார்ந்த மற்றும் நாட்டின் நலன் சார்ந்த பல விடயங்களை நாங்கள் கலந்தாலோசித்தோம்.
 
அதனடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் ஆதரவளிப்பதற்கு மிகப் பொருத்தமானவர் என்ற அடிப்படையில் சஜித் பிரேமதாசவை நாங்கள் ஆதரிப்பது என்றாலும் அவர் நாம் முக்கியமாக முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு சம்மதத்தை தெரிவிக்கும் பட்சத்தில் அந்த ஆதரவை நாங்கள் ஊர்ஜிதப்படுத்துவதாகத் தீர்மானித்திருக்கிறோம்.
 
அதற்கமைவாக அடுத்துவரும் 72 மணித்தியாலயங்களுக்குள் இது தொடர்பான பேச்சுவார்த்தையை அவருடன் மேற்கொள்ளவுள்ளேன்.  அவற்றுக்கு அவர் இணங்கும் பட்சத்தில் எமது உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவித்து சஜித் பிரேமதாசாவின் வெற்றிக்காக நாங்கள் மும்முரமாக ஈடுபடவுள்ளோம்.
 
அடிப்படை விடங்களில் உடன்படிக்கை காணப்படாவிட்டால் மட்டும். அவர் அவ்வாறான விடயங்களில் தலைவரோடு உடன்படவில்லை என்பதை தலைவர் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தால் மீண்டும் எங்களுடைய உயர்பீடத்தைக் கூட்டி இந்த முடிவை மீளாய்வு செய்ய நேரிடலாம்.
 
அதை மீளாய்வு செய்வதனால் மீண்டும் உயர்பீடத்தினாலேயே அதனைச் செய்யலாம். அதனை நான் தனித்து மேற்கொள்ள முடியாது. முக்கியமான விடயங்களை எழுத்து மூலம் பெறுவோம். அவரது தேர்தல் முன்னெடுப்பை பாதிக்கும் விதத்தில் எங்கள் கோரிக்கை அமைந்திருக்கப் போவதில்லை. 
 
விசேடமாக முஸ்லிம் காங்கிரஸின் ஒத்துழைப்பு அவருக்கு அவசியம் என்பதால் எங்களுடன் உடன்படுவார் என நம்புகிறோம்.
 
ஒவ்வொரு பிரதேசத்திலும் காணப்படும் தேவைகளை எங்களது கட்சியின்  எமது அமைப்பாளர்கள் எனது கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள். அவற்றை அவரிடம் கூறுவேன். அவர் அவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முன்னரும் அவரிடம் கதைத்த விடயங்களை பெரும்பாலும் மீண்டும் அவருக்கு நினைவூட்டவுள்ளேன்.
 
சஜித் பிரேமதாச இணங்காத பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் கதைப்பீர்களா என ஊடகவியளாலர் ஒருவர் கேட்டபோது, அப்படியல்ல அவ்வாறானால் அநுரகுமார திசாநாயக்கவுடனும் நாங்கள் பேசலாம்தானே என்றார்.
 
அமைச்சர்பதவிகளைப் கோருகிறீர்காளா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, அது பற்றிப் பேசமாட்டோம். பதவிகள் அல்ல எங்களுக்கு முக்கியம். பதவிகளில் இல்லாவிட்டாலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு விடயங்களை சாதிக்கத் தெரியும்.
 
கட்சி தாவும் கரணமடிக்கும் தலைமைத்துவம் அல்ல இது. 
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசினீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, ஆம் கதைத்தோம். நான் மட்டுமல்ல நண்பர் மனோ கணேசனும் அவருடன் கதைத்தார். அதாவது ரணிலும் சஜித்தும் ஒன்றாக இணங்கி செயலாற்றுமாறு தான் நாங்கள் கதைத்தோம். அதற்கு ரணிலும் உடன்படவில்லை, சஜித்தும் உடன்படவில்லை. அதனால் கவலையடைந்தோம்.
 
ஜனாதிபதி ரணிலைப் பொறுத்தவரை தலைவருடன் நேரடியாகக் கதைக்காமல் எங்களது வேறு நபர்களுடன் கதைத்து அவர்களது ஒத்துழைப்பை பெற எத்தணித்து வருகிறார். அதனால் முஸ்லிம் காங்கிரஸுக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி