1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முகாவின் நேற்றைய (04)  உயர்பீடக் கூட்ட

புகைப்படங்கள் பெரும் பேசு பொருளாக காணப்பட்டன. பலரும் பல கருத்துக்களை முகநூல் வழியாக முன்வைத்த வண்ணமுள்ளனர். நக்கல், நையாண்டி எனறு அது தொடர்கிறது. 

உண்மையில் - என்ன நடந்தது என்று நேற்று முழுநாளும் சர்ச்சையுடன் பேசப்பட்ட முகாவின் உயர்பீட உறுப்பினர், கட்சியின் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான்  தன்னிலை விளக்கம் ஒன்றை விடுத்துள்ளார்.
 
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
 
யஹியாகான் - ஆகிய எனது முகநூலில் நேற்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தமை உண்மையே. 
 
எனது வழக்கமான செயற்பாடு அல்லது எனது பொழுது போக்கு - புகைப்படங்கள் எடுப்பது. இவ்வாறு நிறைய புகைப்படங்கள் எடுப்பது எனது வழக்கம். ஆனால், அவற்றை பதிவேற்றுவது நான் அல்ல. 
 
எனது முகநூல் கணக்கை இயக்குவது வேறு ஒருவர். அவர்தான் சகல பதிவேற்றங்களையும் செய்வார். அவ்வாறு , அவரால் பதிவேற்றம் செய்யப்பட்டதுதான் நேற்றைய உயர்பீட புகைப்படங்கள்.
 
உயர்பீட உறுப்பினர்கள் தூங்குவது போன்று காணப்படும் புகைப்படங்கள் உட்பட பத்து புகைப்படங்களை அனுப்பி இருந்தேன். அவரும் அவற்றை சரியாக நோக்காது வெளியிட்டு விட்டார். இதனை கல்முனையில் இருந்த ஒருவர் அவதானித்து , எனக்கு அறிவித்த பின்னர் - நான் , எனது முகநூலை இயக்குபவருக்கு அறிவித்து அழித்து விடுவதற்கு இடையில் - பலர் அதனைக் கொப்பி" பண்ணி பல வியாக்கியானங்கள் வழங்க பலர் ஆரம்பித்து விட்டனர். 
 
புகைப்படங்களை அனுப்பி விட்டு - நான் உயர்பீடக் கூட்டத்தில் சுமார் 20 நிமிடங்கள் வரை பேசிதேன். அந்த வேளையில் தான் இவ்வளவும் நடந்து முடிந்து விட்டது.  
 
இதுதான் நடந்தது என்று யஹியாகான் தன்னிலை விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உயர்பீடக் கூட்டத்தில் பேசிய யஹியாகான்:- கட்சி, சமூகம், இளைஞர், ஊர் சார்ந்த விடயங்கள் , பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுகு முறை  மற்றும் எம்பீக்கள் கட்சியுடன் இருப்பார்கள் என்ற நிச்சயப்படுத்தி பேசியிருந்தேன்.
 
உயர்பீடத்தில் என்னை வழமையாக எதிர்க்கும் நான்கு பேர் உள்ளனர். அவர்களே இதனை பூதாகரமாக்கி - " யஹியாகான் வேண்டுமென்று செய்துள்ளார் " என்று தலைவரிடம் குற்றம் சுமத்தினர்.
 
தலைவர் ரவூப் ஹக்கீம் அனைத்து விடயங்களையும் அவதானித்து விட்டு ,
 " யஹியாகான் - அப்படிப்பட்டவர் அல்லர். புகைப்படங்கள் எடுப்பது அவரது வழக்கம், பழக்கம். எனினும் உயர்பீட உறுப்பினர்கள் சிலரின் கவலையை உணர்ந்தவனாக " அடுத்து வரும் - ஒரேயொரு உயர்பீடக் கூட்டத்திற்கு வருகை தருவதற்கு தடை விதிக்கிறேன்" என தெரிவித்தார்.
 
மேலும் - கட்சியில் யஹியாகானுடைய வகிபாகம் பற்றி தலைவர்  பாராட்டியதோடு , இந்த முடிவை மனவருத்தோடு எடுக்க வேண்டிய நிலைமை பற்றியும் எடுத்துரைத்தார்.
 
இதனையடுத்து - நான் எழுந்து ,  தலைவரோடு கைகுலுக்கி ,   புன்னகைத்தவாறு  அங்கிருந்து வெளியேறினேன். மற்றும்படி - நான் வெளியேற்றப்பட்டேன் என்பது அப்பட்டமான பொய்.
 
முகாவின் தலைவராக வரத் துடிக்கும் சிலரின் பக்குவமின்மையையும் இங்கு நான் அவதானித்தேன்.
 
இங்கு - இறுதியாக ஒன்றை மட்டும் அவதானிக்க என்னால் முடிகின்றது. 
 
என்னை கட்சியில் இருந்து விலக்கி விட்டார்கள் என்று அப்பட்டமான பொய்களை தனது எடுபுடிகளைக் கொண்டு முகநூல்களில் எழுதிவரும் ஒரு சில உயர்பீட உறுப்பினர்கள் - என்னை நாடு பூராவும் பிரபல்யமடையச் செய்து விட்டனர் . அத்துடன் இவர்கள் என்னைப் பார்த்து அரசியல் ரீதியாக பயப்படுகின்றனர் என்பதை உணர முடிகின்றது. 
 
என்னைப் பொறுத்தவரை - 4 வாக்குகள் கூட சொந்த ஊரிலேயே இல்லாத இவர்களை நான் கணக்கெடுப்பதே இல்லை என்றும் யஹியாகான் மேலும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி