1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மொட்டு பணத்துக்காக விற்பனை

செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை  பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் நேற்று (05) இரவு இடம்பெற்றது.

பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரன, அலி சப்ரி உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக மாவட்ட மட்டத்தில் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க,

"தேற்றைய கலந்துரையாடல் மாவட்டக் கூட்டங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அமைப்பது, தொகுதிக் கூட்டங்கள் மற்றும் பிரசார விடயங்கள் தொடர்புடையனவாக அமைந்தது.  எங்களுடன்  91 எம்.பி.க்கள் இருந்தனர். இன்னும் சிலர் உள்ளனர். அவர்களின்  பெயர்கள்  விரைவில் வெளியிடப்படும்.என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  கருத்துத் தெரிவிக்கையில்

“ஜனாதிபதி எம்மைப் பிரிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்பதை நான் மிகுந்த பொறுப்புடன் கூறுகிறேன். நாட்டு மக்களின் கருத்தின்படி ஒன்றிணைந்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குமாறு கோரினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி