1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில்

ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. tamilnews1

கடந்த சனிக்கிழமை தாய்ப்பால் அருந்திய பின்னர் குழந்தை அசைவின்றி காணப்பட்டதாக அளவெட்டி வைத்தியசாலையில் குழந்தையை அனுமதித்த நிலையில் , அங்கிருந்து தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.  

குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , உட்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது , கைகள் , கால்களின் எலும்புகளில் முறிவுகள் , தலையில் பலமாக தாக்கப்பட்ட காயங்கள் , கண்டல் காயங்கள், உள்ளிட்டவை கண்டறியப்பட்டு, குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என அறிக்கையிடப்பட்டது. 

இதனையடுத்து குழந்தையின் தாயாரை கைது செய்த பொலிஸார் தாயாரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்போது , குழந்தை பால் குடிக்க மறுத்தமையால் கைகள் கால்களை திருகியதாகவும் , தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் , தலையை சுவரில் மோதியதாகவும் குழந்தையின் கால்களை தான் ஏறி மிதித்தாகவும் , காதுக்குள் பிரம்பை விட்டு குத்தியதாகவும் விசாரணைகளில் தெரிவித்துள்ளார். 

விசாரணைகளின்பின்னர் தாயாரை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தியவேளை தாயை 07 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மன்று , தாயை மனநல மருத்துவரிடம் முற்படுத்தி , மருத்துவ அறிக்கையை பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி