1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்

அண்மைய உயர்பீடக் கூட்டத்தின்போது அங்கு சமூமளித்தவர்களில் சிலரின்  'தூங்கு மூஞ்சி' புகைப்படங்களைப் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளான கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஏ.ஸி. யஹியாகான் மீது மேலதிக நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டா என கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.

அவர் செய்த குற்றத்துக்கு அன்றைய தினமே எமது கட்சித் தலைமை தண்டனையைக் கொடுத்து விட்டது.
 
இதன்படி, அன்றைய கூட்டத்துக்கும் எதிர்வரக் கூடிய மற்றொரு கட்சியின் உயர்பீடக் கூட்டத்துக்குமே அவருக்கு தடைவிதிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
 
குறித்த சம்பவம் தொடர்பில் யஹியாகான் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு அவரைக் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அப்பட்டமான பொய்  என்றும் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி