1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி வேட்பாளராக

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில்  நிறுத்தப்படுவதனை தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நிராகரித்துள்ளதால்,  பிரதமர் தினேஷ் குணவர்தனவை போட்டியிடுமாறு கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்புமனுவை ஏற்றுக் கொள்ளுமாறு மொட்டுக் கட்சித் தலைவர்களிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பிரதமர் இந்த யோசனையை நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நாமல் ராஜபக்க்ஷவும் மொட்டுக் குழுவும் தற்போது ஜனாதிபதி வேட்பாளரை கண்டுபிடிப்பதில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அதே வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

இதேவேளை, தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மறுத்ததால், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தயார் என மொட்டு தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலில் இருந்து தம்மிக்க பெரேரா விலகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அவரது தேர்தல் பிசரசாரத்தின் உத்தியாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி