1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நிபுண ராமநாயக என்பவரைக்

கடத்திச் சென்று தடுத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், அக்காலப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி அமல்  ரணராஜா தீர்ப்பளித்தார்.

பலவந்தமாக கடத்தப்பட்டவர் மாலபே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவனான நிபுண ராமநாயக்க என்பவராவார்.

இந்தச் சம்பவத்துக்காக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, ரவிந்து குணவர்தன மற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தலா நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.

அத்துடன், அந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளான  வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷனி பெரேரா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட  இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கவும்  நீதிவான் உத்தரவிட்டார்.

ஆகஸ்ட் 4, 2009 அன்று, தனுஷ்க நிபுன ராமநாயக்க மாலபேயில் பலவந்தமாக கடத்தப்பட்டார்.

வாஸ் குணவர்தனவுக்கு  மற்றுமொரு வழக்குக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி