1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இன்று நாட்டில் சமூக-பொருளாதார

அநீதி தலைவிரித்தாடுகிறது. சிறிய தரப்பொன்றின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தின் பெயரால் கொடுங்கோல் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறுகிய இலாபங்களுக்காக இந்நாட்டின் 220 இலட்சம் மக்களைப் பலிகடா ஆக்கி முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நியாயமற்ற ஆட்சி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை வீரகெடிய நகரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் இன்று(10) கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்து உரையாற்றிய அவர்
 
நட்பு வட்டார ரீதியாக நலன்களை பெறும் நிலைக்குப் பதிலாகத் தகுதி அடிப்படையிலான உரிய இடங்களையே வழங்க வேண்டும் என்பதே இளைஞர்கள் கோரும் மாற்றமாகும். ஊழல், மோசடி மற்றும் திருட்டுக்குப் பதிலாக வெளிப்படைத்தன்மை மேலாதிக்கத்திற்கு பதிலாக பங்கேற்பு ஜனநாயகத்தையுமே அவர்கள் கோரி நிற்கின்றனர்.
 
பல்வேறு தலைவர்களின் முட்டாள்தனமான முடிவுகளால் இன்று நாட்டு இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் சந்தை கல்வி, தொழில்முனைவு, சமூக பாதுகாப்பு என்பன இன்று காணாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி