1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் இந்த பதவிப் பிரமாணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணராச்சியின் பெயர் குறிப்பிட்ட விசேட வர்த்தமானி  வெளியிடப்பட்டது.
 
இதன்படி, தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி உட்பட நால்வர் அமைச்சரவை அமைச்சர் பதவிகளையும் வகிப்பார்கள்.
 
புதிய நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த அமைச்சரவை அந்தப் பதவிகளில் பணியாற்ற வேண்டும்.
 
எனினும் அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமைச்சரவையைக் கூட்டி நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், மேலும் பல புதிய அமைச்சு செயலாளர்களும் நிரப்பப்படவுள்ளனர்.
 
இதன்படி, தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இன்று நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி