1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் ஜனாதிபதி ரணில்

விக்ரமசிங்க நேற்று (23) கொழும்பு உள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் தனது நண்பர்கள் குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பொதுஜன பெரமுனவில் தமக்கு வாக்களித்தவர்கள் அதிகம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளிக்க வந்தபோதும் மக்கள் அவர்களுடன் வரவில்லை எனத் தோன்றுவதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி,  மொட்டுக்கட்சியின் பெரும்பான்மையான மக்கள் அநுர திஸாநாயக்கவுக்கே வாக்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்ததாக பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதே பொருத்தமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியும் இந்த யோசனைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது நான்கு புதிய முகங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி