1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அனுராதபுரம் மாவட்டத்தில் ஜனவரி மாதம் தொடக்கம் இது வரைக்கும் 200 பேருக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதுடன் அதனால் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அனுராதபுரம் மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தேஜன சோமதிலக தெரிவித்தார்.

திறப்பனை, விலச்சிய மற்றும் இபலோகம பகுதிகளைச் சேர்ந்த மூவரே இதனால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு 150 பேருக்கு மாத்திரமே எலிக்காய்ச்சல் ஏற்பட்டிருந்ததுடன் இவ்வருடம் இது வரைக்குமான கால பகுதிக்குள் 200 பேர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

தலாவ, விலச்சிய, தம்புத்தேகம, மதவாச்சி மற்றும் கெக்கிராவ பிரதேசங்களிலேயே அதிகமானோர்க்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி