1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் மூன்று முக்கிய விடயங்களை இந்தியா நிறைவேற்றவில்லை என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.அம்பாறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தியா பல நிபந்தனைகளை நிறைவேற்றியிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவது விடுதலைப்புலிகளிடமிருந்து ஆயுதங்களை களைவது இரண்டாவது நாட்டில் இன்னொரு யுத்தம் இடம்பெறாததை உறுதி செய்வது என தெரிவித்துள்ள சரத்வீரசேகர மூன்றாவது வடக்கில் முன்னர் வசித்தவர்களை மீள் குடியேற்றம் செய்வது என தெரிவித்துள்ளார்.

இந்தியா இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்ற தவறிவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இலங்கை உடன்படிக்கை தற்போது செல்லுபடியற்றது என தெரிவித்துள்ள அவர் தற்போது அது நடைமுறையில் இல்லையென்றால் மாகாணசபைகளுக்கும் அது பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகள் மூலமாகவோ அல்லது அரசமைப்பின் மூலமாகவோ நாட்டை யாரிடமும் கையளிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி