1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ரஷ்யாவில் இருந்து 200 பணக்காரர்களுடன் இலங்கைக்கு வரவிருந்த AEROFLOT விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஐரோப்பா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபு காரணமாக விமானம் ரத்துச் செய்யப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அடுத்த வியாழக்கிழமை (31) வரை ரஷ்யாவிலிருந்து இலங்கை வரும் விமானங்கள் நிறுத்தப்படும் என்று விமான நிலைய தலைவர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிரி தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் இலங்கையை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வரவிருந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை (27) இலங்கைக்கு வர திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்ரசிரி தெரிவிக்கையில் ரஷ்ய விமானம் ரத்து செய்யப்பட்ட போதிலும், உக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் ஒரு விமானம் திங்கட்கிழமை (28) இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும், கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை மீண்டும் திறக்க திங்கட்கிழமை (28) முதல் ஜனவரி 19 வரை ஒரு திட்டத்தை தொடங்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

இலங்கைக்கு வரும் செல்வந்தர்களை நேரடியாக ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ரஷ்ய நாட்டு பணக்காரர்களை இலங்கைக்கு அழைத்து வரும் திட்டத்திற்கு முன்பு அந்த நாட்டின் இலங்கை தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க தலைமை தாங்குகிறார் என்று கூறப்படுகிறது.

நாளை (26) முதல் மீண்டும் திறக்கப்படுகிறது

இதற்கிடையில், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் நாளை (26) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, வர்த்தக மற்றும் சரக்கு விமானங்கள் இலங்கை விமான நிலையங்களுக்குள் நுழைந்து புறப்பட அனுமதிக்கப்படும்.

சுகாதார ஆலோசனையின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

"இது ஒரு சுற்றுலா திட்டமாக இருக்கப்போகிறதா?"

இதற்கிடையில், சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையம் திறக்கப்படுவது தொடர்பாக சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ள கடிதத்தில் பிழைகள் இருப்பதாக தேசிய சுற்றுலா வழிகாட்டல் விரிவுரையாளர்களின் உறுப்பினர் வைத்தியர் மகேஷ் பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

"விமான நிலையம் சுற்றுலாத் துறையினருக்காக திறக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைத் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ் செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம். இதற்குக் காரணம் சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு நேற்று ஒரு கடிதத்தை வெளியிட்டுருந்தது அந்த கடிதத்தில் சில பிழைகள் உள்ளன.

இது ஒரு சோதனை முயற்சி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இது ஒரு சுற்றுலா குழுவா அல்லது, ஒரு சுற்றுலா கொத்தனியா என்பது எங்களுக்குள்ள பிரச்சினை இது குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம், என்றார் டாக்டர் மகேஷ் பிரியதர்ஷன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி