1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனம் வரும் 31ம் திகதி வியாழக்கிழமை கண்டி குவின்ஸ் ஹோட்டலில்

இடம்பெறும் வைபவத்தின் போது வெளியிடப்பட உள்ளதாக தோ்தல் கொள்கை பிரகடண வரைபுக் குழுவின் பிரதானி நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் அன்றைய தினம் மல்வத்து - அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு கொள்கைப் பிரகடணத்தின் முதல் பிரதிகள் வழங்கி வைக்கப்படும்.  இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர, இம்முறை 2015ம் ஆண்டை விட அனேக முற்போக்கான, ஆக்கபூர்வமான மற்றும் நாட்டு இளைஞர்களது பெண்களது மற்றும் நாட்டு மக்களின் எதிர்காலம் தொடர்பில் அவதானத்துடன் பார்க்கும் தேர்தல் கொள்கைப் பிரகடணம் ஒன்றை வெளியிடுவோம் என்றும் கூறினார்.

ராஜபக்ஷக்களின் விசித்திரக் கதைகளைப் போன்றில்லாமல், நாம் இம்முறையும் சொல்வதைச் செய்வோம்.

“நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை அடுத்த வியாழக்கிழமை கண்டியில் வைத்து வெளியிடுகின்றோம். எமது தேர்தல் விஞ்ஞாபனம் ராஜபக்ஷக்களிள் விஞ்ஞானம் போன்றதல்ல. நான் இப்போது பேசுவது ராஜபக்ஷக்கள் சில தினங்களுக்கு முன்னா் வெளியிட்டதைப் பற்றி மாத்திரமல்ல. 2005ம் ஆண்டிலும் புதிய நாடு என்று ஒன்றை வெளியிட்டார்கள். 2010ம் ஆண்டிலும் ஒன்றை வெளியிட்டார்கள்.  ஆனால் அவர்கள் செய்தது இந்த அனைத்து கொள்கை பிரகடணத்திலும் கூறப்பட்ட விடயங்களையல்ல. சொல்வது ஒன்று, செய்தது ஒன்று. 2005ம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை ஒழிப்பதாகக் கூறினார்கள். அது மாத்திரமல்ல, பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள். சம்பளத்தை அதிகரிப்பதாகச் சொன்னார்கள். போஷாக்கு பொதியை வழங்குவதாகச் சொன்னார்கள்.

இவ்வாறு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதிகளுக்கு பதிலாக அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் அவர்களது சிந்தனையில் இருப்பது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான சர்வாதிகார தன்மையினை உறுதிப்படுத்தி தமது குடும்ப ஆதிக்கத்தை பலப்படுத்துவதே தவிற வழங்கிய வாக்குறுதிகள் அல்ல என்பதை என்னால் நிறூபிக்க முடியும்.

அதே போன்று இம்முறையும் விசித்திரக் கதைகளையே இம்முறையும் கூறியிருக்கின்றார்கள் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி