1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதித் தேர்தல்

அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமுல்படுத்துமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் இன்று பாதுகாப்புப் பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தின் போது, ​​தேர்தல் காலம் முழுவதும் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

கடந்த இரண்டு வருடங்களாக எதிர்கொள்ளப்பட்ட சிக்கலான சவால்களின்போது, ​​தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய அமைச்சினால் தீவிரமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த காலப்பகுதியில் தேசிய பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்தி நாட்டை ஸ்திரப்படுத்த பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தென்னகோன் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி