1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடாளுமன்ற உறுப்பினர்

எம்.ஏ சுமந்திரன் பயணித்த வாகனம் ஏ9 வீதி - கிளிநொச்சியில் விபத்துக் குள்ளாகியுள்ளது.

நேற்று (27) மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின்  வாகனம் மீது எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
 
விபத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 
 
கடந்த ஒரு மாதத்துக்குள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பயணித்த வாகனங்கள் இதுவரை விபத்துக்குள்ளாகி உள்ளன.
 
ரிஷாத் பதியுதீன், டிலான் பெரேரா  ஆகியோரின் வாகனங்கள் முன்னர் விபத்துக்குள்ளாமை தெரிந்ததே. தற்போது சுமந்திரனின் வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி