1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (22) காலை 10.00 மணியுடன் நிறைவடைந்ததாக முன்னாள் எம்பி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்தத்  தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், மேலதிகமாக 20 நிமிட அவகாசம் வழங்கப்பட்டதாகவும் ஆனால் அதுவும் தற்போது முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகளை பகிரங்கப்படுத்துமாறு கோரி தற்போதைய ஜனாதிபதி  அநுரகுமார திஸாநாயக்க அரசியல் மேடையில் தெரிவித்த கருத்து அடங்கிய காணொளி ஒன்றையும்  உதய கம்மன்பில காட்டினார்.

இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகளின் இணைப்புகளை கையளிப்பதற்கான திகதி மற்றும் நேரத்தைக் கோரி அமைச்சர் விஜித ஹேரத்துக்கு அவர் பதிவுத் தபாலில் கடிதம் ஒன்றை கம்மன்பில அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி