மொட்டு அணி­யிடம் தேசி­யப்­பட்­டி­யலை பெறு­வ­தற்­காக ஹிஸ்­புல்லாஹ், பிள்­ளையான், கருணா அம்மான் போன்றோர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு அளிக்­கப்­படும்

சிறு­பான்மை வாக்­கு­களை சித­ற­டிக்கும் வேலை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். ஆனால், மஹிந்­தவும் கோத்­த­பா­யவும் சமயம் பார்த்து இவர்­க­ளுக்கு கழுத்­த­றுப்புச் செய்­வார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்­கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் கல்­குடா தொகுதி அர­சியல் பணி­ம­னையை நேற்று வெள்­ளிக்­கி­ழமை திறந்­து­வைத்த பின்னர், நடை­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய அவர் மேலும் கூறி­ய­தா­வது; இந்த ஜனா­தி­பதி தேர்­த­லா­னது அடுத்து வர­வுள்ள எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கும், மாகாண சபை தேர்­த­லுக்­கு­மான ஒரு ஒத்­தி­கை­யாகும். இத்­தேர்­தலில் நாங்கள் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கி­யுள்ள சஜித் பிரே­ம­தா­சவை வெற்­றி­பெறச் செய்­வதன் மூலம் எதிர்­கால அர­சியல் இருப்­பையும் சமூ­கத்தின் பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள முடியும்.

நாங்கள் ஆத­ர­வ­ளிக்கும் சஜித் பிரே­ம­தாச இந்த தேர்­தலில் அமோக வெற்றி பெறு­வது நிச்­சயம். அவ­ரது தரப்பை பலப்­ப­டுத்­து­வ­தற்கு எங்­க­ளது வாக்­கு­வங்கி பெரிதும் பங்­க­ளிப்புச் செய்யும் என்ற நம்­பிக்கை எங்­க­ளுக்­கி­ருக்­கி­றது. கடந்த தேர்­தலை விட வாக்­க­ளிப்பு வீதம் பல மடங்கு அதி­க­ரிப்­பதன் மூலம் இல­கு­வாக எங்­க­ளது வெற்­றி­வாய்ப்பை உறு­தி­செய்து கொள்­ளலாம்.

ஹிஸ்­புல்லாஹ் தேசியப் பட்­டி­யலில் மூலம் மீண்டும் பாரா­ளு­மன்றம் நுழை­வ­தற்­காக சமூ­கத்தை அட­கு­வைத்து, கோத்­தா­வுக்கு வாக்­கு­களை சேக­ரிக்கும் வேட்­டையில் இறங்­கி­யி­ருக்­கிறார். நாட்­டிற்கு பெரும் அச்­சு­றுத்­த­லா­க­வுள்ள கோத்­த­பா­யவை வெற்­றி­பெறச் செய்­வதே ஹிஸ்­புல்லாஹ் போன்­றோரின் செய­லா­க­வுள்­ளது. அவ­ரு­டைய சுய­லா­பத்­துக்கு துணை­போகும் வகையில் மக்கள் ஏமாந்து போக­மாட்­டார்கள்.

சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு அளிக்­கப்­படும் முஸ்லிம் வாக்­குளை சித­ற­டிப்­பதே இவர்­களின் நோக்­க­மாகும். அது­மாத்­தி­ர­மின்றி தேசி­யப்­பட்­டியல் ஆச­னங்­களை ஒதுக்கித் தரு­வ­தா­கக்­கூறி, ஹிஸ்­புல்­லாஹ்­வுடன் சேர்த்து பிள்­ளை­யானும் கருணா அம்­மானும் மொட்டு அணிக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­கின்­றனர். அவர்­களின் இந்த நாடகம் ஒரு­போதும் பலிக்­காது. கோத்­த­பா­யவும், மஹிந்த ராஜ­ப­க்ஷவும் சமயம் பார்த்து இவர்­க­ளுக்கு கழுத்­த­றுப்புச் செய்­வார்கள்.

சஜித் பிரே­ம­தா­சவை வெல்­ல­வைக்கும் நோக்கில் சகல மாவட்­டத்­திலும் அவ­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கக்­கூ­டிய ஏனைய கட்­சி­க­ளோடு முரண்­பட்டுக் கொள்­ளாத வகையிங் எங்­க­ளது தேர்தல் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். சிறு­பான்மை சமூகம் தலை­நி­மிர்ந்து வாழ்­வ­தற்கு அனை­வ­ரையும் அர­வ­ணைத்துச் செல்லும் சஜித் பிரே­ம­தா­சவை தவிர வேறொரு தெரிவு இருக்­க­மு­டி­யாது என்றார்.

இந்­நி­கழ்வில் இரா­ஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், மன்சூர் ஏ. காதிர், கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கல்குடா தொகுதி அமைப்பாளர் றியாழ், இஸ்மாயில் ஹாஜியார் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்