1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 
Feature

தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ´அபிநந்தன விருது விழா´ நேற்றிரவு (12) கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இங்கு கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஜனாதிபதிக்கு ´அபிநந்தன விருது´ வழங்கினார்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று ஆரம்பமான ´இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய வருடாந்த மாநாடு - 2023´ இற்கு இணைந்த வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

ஜூலியானா மார்கரெட் கொஸ்வத்த, வோல்டர் லெஸ்லி டி சில்வா, இரத்னசபாபதி ஆறுமுகம் ஜெகதீசன், ஜனாதிபதி சட்டத்தரணி உபாலி ஏ. குணரத்ன. கனகரத்னம் கணேஸயோகன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர், நீதியரசர் அசோக நிஹால் டி சில்வா, நீதியரசர் டி.ஜே.த.எஸ். பாலபடபெந்தி, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன உட்பட 26 சட்டத்தரணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், ´அபிநந்தன´ குழுவின் தலைவர் ஜனப்ரித் பெர்னாண்டோ, இணைப்பாளர் சமத் பெர்னாண்டோ, உள்ளிட்ட பிரதம அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
 
Feature

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணம் போதுமானதா என்பதை தேர்தல் ஆணைக்குழு பரிசீலிக்க
Feature

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ_ 9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் இருந்து வீடு வரவும் மிகவும் சிரமப்படுகின்றனர்

இது தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கும் குறிப்பாக வடமாகாண ஆளுநர், வடமாகாண போக்குவரத்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மாணவர்கள் இன்றும் பாதிக்கப்படும் நிலையே காணப்படுகிறது

இவ்வாறான நிலையில் பரீட்சை நடைபெறும் இந்த காலப்பகுதியிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்

இவ்வாறு பேருந்துகள் ஏற்றாமல் செல்வதால் வீதியை மறித்து பாரிய போராட்டம் ஒன்றை செய்தபோது பொலிசார் இந்த விடயம் தொடர்பில் மாங்குளம் நீதிமன்றுக்கு கொண்டு சென்று வடமாகாண போக்குவரத்து பிரிவினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது

இதனைவிட இலங்கை போக்குவரத்து சபை உயர் அதிகாரிகளால் மாணவர்களை பருவகால சிட்டை பெறுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது மாணவர்கள் பருவகால சிட்டையை பெற்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை மாறாக பருவகால சிட்டை பெற்ற பின்னர் மாணவர்களை ஏற்றாமல் செல்வது அதிகரித்திருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்

இவ்வாறான பின்னணியில் பாடசாலையில் பரீட்சை நடைபெறுகின்ற நிலையில் இன்று(13) காலை 8.12 மணிவரை மாணவர்களை எந்த பேருந்துகளும் ஏற்றாமல் சென்ற நிலையில் மாணவர்கள் தவித்து நின்ற நிலையில் மாங்குளம் போக்குவரத்து பொலிசார் அழைக்கப்பட்டு மாணவர்கள் பேருந்தில் ஏற்றிவிடப்பட்டுள்ளனர்

குறித்த பேருந்து நடத்துனர் கூட பொலிசாருடன் வாக்குவாதம் பட்டே பேருந்தில் மாணவர்களை ஏற்றி செல்கின்ற அதேவேளை குறித்த விடயங்களை ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளார்

தொடரும் இந்த நிலைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் ஏ_9 வீதியை மூடி மாபெரும் போராட்டம் மேற்கொள்வதை தவிர வேறு வழியில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்

Feature

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக இன்று (13) நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில்
Feature

அடுத்த வருடம் (2024) ஜனவரி மாதம் அதிபர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டை அரசாங்கம் செய்து வருவதாக அரச

Feature

சிறி லங்கன் விமான சேவையை மறுசீரமைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய Lazard International Finance

Feature

சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருதை தட்டித் தூக்கியது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு" பாடல்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி