1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உதய கம்மன்பிலவின்  நடனங்களைப்

பார்ப்பதற்காக நாட்டு மக்கள்  இந்த அரசாங்கத்தை தெரிவு செய்யவில்லை என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்தார்.

ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சமீர பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த  அவர், ஈஸ்டர் தாக்குதல் அரசியல் உதைபந்தாட்டமாக மாறியுள்ளது, காலம் முழுக்க அதனை நாம் பார்த்து வருகிறோம், சமீபத்தில் வெளிவந்தது கம்மன்பிலவின் ரிலா நடனமாகும்

கம்மன்பிலவின்  நடனங்களை பார்க்க நாட்டு மக்கள் அரசாங்கத்தை நியமிக்கவில்லை, உதய கம்மன்பில ஓர் அரசியல் அனாதை, அவர் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக இதைச் செய்யவில்லை, இது அவரது தேர்தல் பிரசாரம்.

ஈஸ்டர் தாக்குதலைச் இனவாதத்தைப் பரப்பிய ராஜபக்க்ஷ குண்டர் இவர், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம்களை பயமுறுத்துவதற்காக வீதியில் அலைந்தவர்கள் இவர்கள்.

இன, மத பிரச்சினைகளை விதைத்து கோட்டாபய ராஜபக்க்ஷவை ஆட்சிக்கு கொண்டு வந்து பலம் வாய்ந்த அமைச்சுப் பதவியை வகித்த போது கிராம மக்கள் உறங்கிக் கொண்டிருந்தார்களா?

கோட்டாய ராஜபக்க்ஷவிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அங்கும் இங்கும் இழுத்துச் செல்லும்போது அவர் தூங்கிக் கொண்டிருந்தாரா? அப்போது பேச முடியவில்லை.

எந்தவொரு அறிக்கையையும் மறைக்கத் தேவையில்லை, அவை மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும், மேலும் இந்த தாக்குதலால் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி