1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உக்ரேன் அரசாங்கத்தின் போர் முனையில் வெளிநாட்டுப் படைகளை வழிநடத்தி, சர்வதேச உக்ரேன் ஆயுதப் படைகளின் முதல்

சிறப்புப் படையின் தளபதியாக பணியாற்றிய போது ரஷ்ய தாக்குதல்களில் கொல்லப்பட்ட அதிகாரி ரனிஷ் ஹேவகேயின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (06) சடலம் மீட்கப்பட்டதாக உக்ரேனிய சர்வதேச லீக்கின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் பீரங்கித் தாக்குதலுக்கு இலக்கான ரனிஷை, அவரது இரண்டாம்நிலை அதிகாரியான இலங்கையின் கொமாண்டோ படையணியில் பணியாற்றிய நிலையில் உக்ரேன் இராணுவத்தில் சேவையில் இணைந்துகொண்ட கோப்ரல் எல்.கே.ஹதுருசிங்கவே சுமார் 15 கிலோமீற்றர் தூரம் வரை அழைத்து வந்துள்ளார்.

நேற்று உக்ரைன் ,ராணுவ வீரர்கள் சுமார் எட்டு கிலோமீற்றர் தூரம் சென்று, கெப்டன் ரனிஷ் ஹேவகே அதிகாரியின் உடலை பத்திரமாகக் கொண்டு வந்தனர்.

இத்தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கை கடற்படையில் பெடி ஒஷியர் பதவிநிலையை வகித்து, பின்னர் அதிலிருந்து விலகி, உக்ரேன் அரசாங்க இராணுவத்தில் இணைந்துகொண்ட எம்.எம்.பிரியந்தகே மற்றும் இராணுவத்தின் சிங்க ரெஜிமெண்டில் கடமையாற்றி நிலையில் விலகி, உக்ரேன் இராணுவத்தில் இணைந்து சேவையாற்றிய ரொட்னி ஜயசிங்க ஆகியோரின் சடலங்களை நேற்று வரை கொண்டு வர முடியவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய இராணுவத்தின் சர்வதேச லீக்கின் அமெரிக்க, கனேடிய மற்றும் பிற வெளிநாட்டுப் படைகளுக்கு தலைமை தாங்கிய கேப்டன் ரனிஷ் ஹேவகேயின் இறுதிச் சடங்குகள், உக்ரேன் அரசாங்கத்தின் இராணுவ மரியாதையுடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ராணுவ மோதல்கள் தொடங்கியதையடுத்து, வெளிநாட்டு வீரர்களுக்கு உக்ரேன் ஜனாதிபதி அளித்த வெளிப்படையான அழைப்பை ஏற்று ரனிஷ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டு இராணுவத்தில் சேர்ந்தார்.

உக்ரேனிய இராணுவத்தின் சர்வதேச லீக்கில் கேப்டன் ரனிஷ் ஹேவகே சிப்பாயாக சேர்ந்து பணியாற்றிய நிலையில், போர் முனையில் அவர் ஒன்பது முறை காயமடைந்துள்ளார். போர் முனையில் அவரது திறமையைப் பாராட்டி, அந்நாட்டு ஜனாதிபதி அவரை அதிகாரத்திற்கு நியமித்து முதல் சிறப்புப் படைத் தளபதியாக அமர்த்தினார்.

அவரது மார்பு, தலை மற்றும் உடலின் பல பாகங்களிலிருந்து, பீரங்கி குண்டுகள் மற்றும் துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உக்ரேனிய நாட்டின் ஜனாதிபதியிடமிருந்து ஐந்து விருதுகளைப் பெற்ற இராணுவ அதிகாரியாக அவர் திகழ்கிறார் என்று, சர்வதேச லீக்கின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி