1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

“கொழும்பில் தமிழ் வீடுகளை மாத்திரம் இலக்கு வைத்து பொலிஸ் பதிவு இடம்பெறவில்லை. அனைத்து வீடுகளிலும்தான் பதிவு

இடம்பெறுகின்றது” என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்ட அமைச்சர், 'தமிழ், முஸ்லிம், சிங்களம் என மூவின மக்களிடமும்தான் தகவல் திரட்டப்படுகின்றது. தற்போது 90 வீத பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” என்றார்.

அத்துடன், “வெளிப் பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கொழும்பில் தலைமறைவாகியுள்ளனரா அல்லது கொழும்பில் உள்ளவர்கள் வெளியில் உள்ளனரா என்பது உள்ளிட்ட தகவல்களைப் பெறவே இந்தப் பாதுகாப்பு பதிவு இடம்பெறுகின்றது. வீட்டில் எத்தனை பேர் உள்ளனர் எனக் கேட்டால், தகவல்களை வழங்குவது தவறு கிடையாது” என்றும் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி