1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பாணம், பருத்தித்துறைக் கடற்பரப்பில் கைதான 25 இந்திய மீனவர்களில் கடற்படையினரின் தாக்குதல் காரணமாகப்

பாதிக்கப்பட்ட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணராஜ், செமநாதன், சிறிநாத் ஆகிய இந்திய மீனவர்களே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு எல்லை தாண்டி வந்து பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்களைக் கடற்படையினர் படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது 7 பேர் மீதுகடற்படையினர் தாக்கினர் எனவும் இதில் மூவர் மீது கடும் தாக்குதல் மேற்கோள்ளப்பட்டது எனவும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்துப் பாதிக்கப்பட்ட 3 இந்திய மீனவர்களையும் வைத்தியசாலையில் சேர்த்து சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கோரிய நிலையில், அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

காரைக்கால் பகுதி படகில் வந்த 13 பேரில் 7 பேர் மீதே கடற்படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படகின் உரிமையாளரின் முதுகில் அதிக காயங்களும், இன்னுமொரு மீனவருக்குத் தலையில் காயங்களும், மற்றைய மீனவருக்குக் கையில் காயங்களும் காணப்படுகின்றன.

இவ்வாறு காயமடைந்த மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற அதேநேரம் இந்திய மீனவர்கள் தாக்கினர் என்று தெரிவித்து 3 கடற்படையினரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

(மாலைமுரசு)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி