1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கிழக்கு மாகாணத்தின் அடுத்த ஆளுநராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில்

விக்கிரமசிங்கவை காத்தான்குடியைப் பிரதான தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்ற வடகிழக்கு முஸ்லிம் பேரவை கோரியுள்ளது.

இப்பேரவையின் பணிப்பாளர் ஜெ.எல்.எம். ஷாஜகான் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:-

“கிழக்கு மாகாணம் சிக்கலான இனத்துவக் கட்டமைப்பைக் கொண்ட மாகாணம் என்பதை தாங்கள் முழுமையாக அறிவீர்கள். கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்படுகின்ற தமிழ் ஆளுநரை முஸ்லிம்கள் எதிர்ப்பதும் முஸ்லிம் ஆளுநரை தமிழர்கள் எதிர்ப்பதும், சிங்கள ஆளுநரை தமிழ் பேசும் இரு சமூகத்தினரும் எதிர்ப்பதும் கிழக்கின் நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு நடத்துவதில் பாரிய பின்னடைவுகளை இதுவரையில் ஏற்படுத்தியுள்ளன.

“ஆனால், கிழக்கில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் இதுவரையில் ஸ்ரீ லங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளே மிகச் சிறப்பாகக் கடமைகளைச் செய்துள்ளனர் என்று மக்களிடையே பதிவாகியுள்ளது. இராணுவ அதிகாரிகள் ஆளுநர்களாகப் பதவி வகித்த காலங்களில் எந்த இனமும் நிர்வாக ரீதியாகப் பாதிக்கப்பட்டது எனப் பதிவுகளைக் காண முடியவில்லை.

“ஆகவே, எதிர்காலத்தில் கிழக்குக்கு நியமிக்கப்பட இருக்கும் ஆளுநரை மூன்று இனங்களும் விரும்புகின்ற வகையில், எந்த இனத்தையும் பாதிக்காத முறையில் நீங்கள் நியமிக்க வேண்டும்.

“இப்பதவிக்கு மிகப் பொருத்தமானவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே. இவரை நியமிப்பதன் மூலம் கிழக்கின் சுபீட்சத்துக்கு ஆவன செய்யுறுமாறு வேண்டிக்கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பந்தமான சதித் திட்டத்தை அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மேல் சுமத்தி 'சனல் 4'ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

(மாலைமுரசு)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி