1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சமூக வலைதளங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் மதக் குற்றங்களை விசாரிக்க தனிப் பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பிரகாரம் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

"சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் செய்யப்படும் மதக் குற்றங்கள் தொடர்பான புகார்களைப் பெறுவதற்கு தனிப் பிரிவை நிறுவுமாறு, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவு மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

“அதன்படி, மதங்களை இழிவுபடுத்துவது தொடர்பான புகார்களை விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவின் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது” என்று அவர் கூறினார்.

“இதன்படி, பொதுமக்கள் 0112 300 637 என்ற இலக்கத்தின் ஊடாக இது தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க முடியும்.

தொலைநகல் எண் – 0112 381 045

மின்னஞ்சல் முகவரி - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எந்த வகையிலும் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி