1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் புதிதாக உருவாக்கப்படவுள்ள உண்மை மற்றும்

நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு போன்றவற்றுக்கு முழு ஆதரவை வழங்குமாறு, அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சஞ்ஜீவ விமலகுணரத்ன கோரியுள்ளார்.

முப்பது வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நல்லிணக்கப் பொறிமுறைகளுடன் இணைந்து செயற்படுதல் மற்றும் மீண்டும் அவ்வாறானதொரு யுத்தம் ஏற்படுவதற்கு ஏதுவான காரணிகள் குறித்து அந்தப் பொறிமுறைகளுக்குத் தெரியப்படுத்தி, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டச் செயலகங்களிலும் யாழ்ப்பாணம் கச்சேரியிலும் நடைபெற்ற மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் வழமையை விட அதிக ஆர்வத்துடன் அந்தக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளன, ஒரு சில அமைப்புகளைத் தவிர, அனைத்து அமைப்புகளும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று இதுவரையிலான நிகழ்ச்சிகளின் முன்னேற்றத்தை முன்வைத்தன.

அங்கு, திட்டங்கள் மற்றும் அந்தத் திட்டங்களை எவ்வாறு சீரமைப்பது, அவற்றைப் பயன்படுத்துவதற்கான அரசாங்க வழிமுறைகளுடன் இணைந்து பணியாற்றுவது, அரசு சாரா நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பைப் பேணுவது மற்றும் வளங்களைப் பகிர்ந்துகொள்வது போன்றவற்றுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இக்கூட்டம் நடத்தப்பட்ட விதம், பங்கேற்பாளர்களின் பங்கேற்பு மற்றும் கூட்டங்களின் நிர்வாகத்திறனானது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தியமை ஆகியன அங்கிருந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் வெகுவாகப் பாராட்டப்பட்டன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி