1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே நாட்டின் பலமான சக்தி என்று நாம் நம்பிக்கையுடன் கூறுகின்றோம். சிலர் ஆட்சியைப் பிடிக்கும்

முன் அதற்கான கோட் ஷூட்களை அணிந்துகொண்டார்கள். ஆனால் அந்த உடையணிந்த எவரும், இந்நாடு சிக்கலில் இருக்கம்போது அணியத் தயாராகவில்லை. அவ்வாறானவர்களிடம் இந்த நாட்டை ஒப்படைக்கத் தயாரா?” என்று, முன்னாள் ஜனாதிபதியும் மொட்டுக் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, பொதுமக்களின் கேள்வி எழுப்பினார்.

எதிர்வரும் புத்தாண்டுக்கான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பணியை வெளிப்படுத்தும் “வணக்கம் 2024” என்ற தலைப்பிலான விசேட பொது மாநாடு, இன்று (15) பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றதுடன், அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மாநாடு மாலை 3.30 மணியளவில் ஆரம்பமான நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதாவது,

“நீங்கள் அனைவரும்தான் எங்கள் கட்சியின் பலம். எங்களிடம் கூட்டமைப்பு இருக்கிறது, மக்கள் அணிதிரள்வார்கள் என்று சொன்னதும், சமூக வலைதளங்களின் ஊடாக அவதூறு பரப்பினார்கள். ஆனால், அவை எல்லாவற்றுக்கும் நீங்கள் அனைவரும் இங்கு ஒன்றுகூடி நல்ல பதிலடியைக் கொடுத்துவிட்டீர்கள்.

“2005ஆம் ஆண்டு இந்த நாட்டைக் கைப்பற்றியபோதும் எங்களை அவதூறாகப் பேசினார்கள். 30 வருடகால யுத்தத்தின் போது இந்த நாட்டின் எந்தவொரு தலைவராலும் பிரபாகரனுடன் நேருக்கு நேர் போராட முடியாதிருந்ததென்பது  உங்களுக்குத் தெரியும்.

“போரை நிறுத்த சில தலைவர்கள் பிரபாகரனுக்கு ஆயுதம் கொடுத்தனர். நினைவிருக்கிறதா? அவர்கள் யாரென்று நான் சொல்லப்போவதிவில்லை. போரைப் பற்றிய நினைவே இல்லாத குழந்தைகள், இன்று சமூகமயமாக்கப்படுகின்றனர். ஆனால் இப்போது இந்த குழந்தைகளை ஏமாற்றி அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்பவர்கள் இருக்கிறார்கள்.

“இந்த தகவல் தெரியாத ஒரு கும்பல்தான், பொய்களை பரப்பி வருகின்றது. அவர்கள் செய்ததெல்லாம் விமர்சிப்பதுதான். பரவாயில்லை. ஆனால் அது  வேலை செய்யாது. ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தில் சிறந்தவர்களாக விளங்குகிறார்கள். அதாவது, அவர்களால் நன்றாகத் தீமூட்ட முடியும். ஆனால், அதனை அணைக்கத்தான் அவர்களுக்குத் தெரியவில்லை.

“பூனைக்குட்டிகள் மரத்தில் ஏறுவது போல. மரம் ஏறுகிறார்கள், ஆனால் இறங்கத் தெரியவில்லை. 2015இல் நாட்டில் சிலர் மாற்றத்தை விரும்பினர். வித்தியாசம் என்னவென்றால், பொருளாதார விகிதம் மைனஸ் 0.2 ஆகக் குறைந்தது. அத்தகைய உடைந்த பொருளாதாரப் பின்னணி கொண்ட நாட்டிற்கு, எதிர்பாராத விதமாக கொவிட் வந்தது.

“போரில் மக்கள் இறப்பதைத் தடுத்த நாங்கள், கொவிட் தொற்றால் மக்கள் இறப்பதைத் தடுக்கவும் உழைத்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சவாலை அவர் கைவிடாதபோது, ​​அந்த மக்களை கோபப்படுத்தும் பிரச்சாரங்களை சிலர் தொடங்கினர். அதன்பிறகு என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

“எனவே, பொய்யை பிரபலப்படுத்த முயலும் குழுவை இனியும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். சிலர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் தெரியுமா? சிலர் ஆட்சியைப் பிடிக்கும் முன் அதற்கான கோட் ஷூட்களை அணிந்துகொண்டார்கள். ஆனால் அந்த உடையணிந்த எவரும், இந்நாடு சிக்கலில் இருக்கம்போது அணியத் தயாராகவில்லை. அவ்வாறானவர்களிடம் இந்த நாட்டை ஒப்படைக்கத் தயாரா?

“போராட்டம் என்ற போர்வையில் எங்கள் கட்சியினரை சிலர் துன்புறுத்தினர். எங்கள் எம்.பி ஒருவர் நெடுஞ்சாலையில் கொல்லப்பட்டார். போராட்டத்தின் போது எமது கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி