1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தேசிய மக்கள் சக்தியின் தலைவரான குரகமகே தொன் லால்காந்த, மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர்

ஆவார். அது மாத்திரமன்றி அவர் முன்னாள் அமைச்சருமாவார். அவ்வப்போது செய்திகளை வெளியிடும் லால்காந்த, சமீபத்தில் சமூக வலைதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டி வைரலாக பரவி வருகிறது.

இந்த காணொளி அரட்டையின்போது, அரசு அதிகாரத்தை பெற்ற பின் போட்டியாளர்களை அடக்கி, எதிர்கால பொருளாதார திட்டத்தை எப்படி செயல்படுத்துவார்கள் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. லால்காந்த, போட்டியாளர்களை அடக்கும் முறையின் முழுத் திட்டத்தையும் சொல்லாமல், “சொன்னது போதும், சிங்களவர்களுக்கு புரியும்” என்று கூறுகிறார்.

அந்த விவாதத்திற்குப் பிறகு அவர், அரசாங்கத்தின் சிலுமின பத்திரிகைக்கும் பேட்டியளித்தார்.

"இந்த அரசாங்கம், மக்களை ஆயுதப் போராட்டத்திற்கு இட்டுச்செல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று சிலுமின ஊடகவியலாளர் கேட்டுள்ளார்.

அதற்கு, லால்காந்த இவ்வாறு கூறுகிறார், “மக்களை அறிவால் ஆயுதபாணியாக்குவதும், துப்பாக்கியால் ஆயுதம் கொடுப்பதும் இரண்டு. மக்கள் ஆணை இல்லாத ஆட்சியாளர்கள் மீது பொதுமக்கள் ஆயுதம் ஏந்திய நடவடிக்கை எடுக்க வேண்டும், நாங்கள் அதற்கு தலைமை தாங்கி வழிநடத்துவோம். அதற்காக நாங்கள் ஏற்கனவே பணியாற்றி வருகிறோம். கிராம மட்டத்தில் மக்களுக்கு அறிவித்து, பிரதேச மட்டத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

“அந்த ஆயுதப் போராட்டம் எப்படிச் செயல்படுத்தப்படும்?” என, லால்காந்தவிடம் பத்திரிகையாளர் கேட்டுள்ளார்.

அதற்கு லால் இப்படி பதில் சொல்கிறார், “சட்டி பானைகள், அடுப்புகள், ப்ளெண்டர் போன்றவற்றை கையில் ஏந்தியபடி பெண்கள் வீதிக்கு வந்தால், விவசாயிகள் அரிவாள்களை எடுத்துக்கொண்டு வீதியில் இறங்கினால் என்ன நடக்கும், அப்படி மக்கள் வீதிக்கு வரும் ஒரு நாள் வரும்.

“விவசாயிகள் மற்றும் மீனவர்களிடம் ஏற்கனவே இதுபற்றி விவாதித்துள்ளோம். இது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் தொடர் மாநாடுகளை நடத்தி வருகின்றோம். பிரதேச மட்டத்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய விவசாயிகள் டிராக்டர்களுடன் தெருவில் இறங்கியதைப் போல மக்கள் தெருக்களில் இறங்குவார்கள். அதன் முதல் வரிசையில் நாங்கள் இருப்போம்” என்று, லால்காந்த கூறியிருக்கிறார்.

எப்படியாவது லால்காந்தவின் வாயிலிருந்து சிக்கலான வார்த்தையொன்றை எடுக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் கேள்விகளை எழுப்பியுள்ள பத்திரிகையாளர், "ஆயுதப் போராட்டம் என்ற பெயரில் இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்காகவா திட்டமிடுகிறீர்கள்” என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள லால்காந்த, “எங்கள் போராட்டம் மக்களை அறிவால் சித்தப்படுத்துவதாகும், அந்த போராட்டம் கோல்ஃபேஸ் போராட்டத்தை விட மிகவும் தீவிரமான போராட்டமாக இருக்கும். கோல்ஃபேஸ் போராட்டம் கேப்டன் இல்லாத கப்பல் போல இருந்தது. எங்கள் போராட்டம் அப்படியல்ல. நாங்கள் தலைமைத்துவத்தை வழங்குவோம், வழிநடத்துவோம். ஆயுதம் ஏந்திய மக்கள் அரசியல் அறிவுடனும் எங்களுடன் இணைகிறார்கள்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறார்.

இது வெறும் கதையல்ல, ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள களமிறங்கிய திசைக்காட்டியின் திட்டமாகும். அநுர, திலித், ஜனக ரத்நாயக்க ஆகியோரைத் தவிர வேறு யாரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வரப்போவதாக வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால், அடுத்த வருடம் இவையெல்லாம் மாறலாம்.

ஏனெனில், 2024 என்பது, தேர்தல் ஆண்டாகும். நாங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தியபடி பல கூட்டணிகள் ஜனவரிக்குள் பகிரங்கமாகிவிடும். அதன் பிறகு அவர்களின் குவியலை அதிகரிப்பதற்கான போட்டிகள் நடக்கும். அதாவது நிறைய நல்ல நல்ல விளையாட்டுகள் நடக்கப்போகின்றன. அவற்றைப் பார்க்க காத்திருப்போம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி