1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

2024 என்பது தேர்தல் ஆண்டிடன்பதால், கூட்டணிக்குமேல் கூட்டணி அமைக்கும் பணிகள் மும்முரமாகியுள்ளன. சில கூட்டணிகள்

உடையவும் ஆரம்பித்துள்ளன. அது போதாதென்று, சில கட்சிகளைக் கலைத்துவிடுவதற்கான பேச்சுக்களும் இடம்பெறுகின்றன.

அடுத்த தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் பரந்த கூட்டணியை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக, கடந்த வாரம் நாளிதழொன்றில் செய்தி வெளியாகியிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியை மையப்படுத்தியே அந்தக் கூட்டணி உருவாவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டிலான் பெரேரா, நாலக்க கொடஹேவா, ஜீஎல் பீரிஸ் மற்றும் ஷன்ன ஜயசுமன ஆகியோர் அதில் இணையவுள்ளனர் என்றும் அந்தக் கூட்டணியின் பிரதித் தலைமைப் பதவியை டலஸ் அழகப்பெருமவுக்கு பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலேயே ஷரித்த ஹேரத் போன்ற தரப்பினர் அதில் இணைந்துகொள்ளவுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சஜித்தின் ஐமசவையும் டலஸின் சுதந்திரச் சபையையும் இணைக்கப்போய் பெரும் பிரச்சினையே எழுந்துள்ளதென்றும் ஒரு கதை வெளியாகியுள்ளது. அதில் ஒரு கதை, ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டமொன்று பற்றிக் கூறுகிறது.

ஜனவரியில் உருவாக்கப்படவுள்ள ஐமசவின் புதிய கூட்டணி தொடர்பில் பேசுவதற்கு, டலஸ் தரப்பு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியுள்ளது. இதில், டலஸ், ஜீஎல், சஜித், ரஞ்சித் மத்துமபண்டார மாத்திரமே கலந்துகொண்டுள்ளனர்.

எவ்வாறெனினும், டலஸ் தரப்பிலிருந்து ஷன்ன ஜயசுமனவும் வருவதாக அறிவித்துள்ளனர். இதனை சமப்படுத்துவதற்காக, சஜித் தரப்பில் சுஜீவ சேனசிங்கவும் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் இந்தக் கூட்டத்தின்போது, புதிய கூட்டணி தொடர்பிலும் அதன் பிரதித் தலைமை தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது. அந்தப் பதவி தமக்கு வேண்டுமென்று ஷன்ன தரப்பு கோரியுள்ளது.

‘இந்தத் தருணத்தில் அதைச் செய்வது கடினம். காரணம், தயாசிறி, ரொஷான் போன்றோரும் எதிர்காலத்தில் எம்மோடு இணையலாம். இன்னும் பலர் எம்முடன் இணையக் காத்திருக்கின்றனர். அதனால், பிரதித் தலைமைப் பதவி டலஸுக்கு என்று திடீரென நாங்கள் கூறிவிட்டால், அவர்கள் இழுத்தடிப்புச் செய்ய வாய்ப்புள்ளது.

வேண்டுமென்றால், புதிய கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை வழங்க முடியும்” என்று, டலஸ் தரப்புக்கு மத்துமபண்டார தரப்பு கூறியுள்ளது. ஆனால் அந்த யோசனைக்கு டலஸ் விருப்பம் தெரிவிக்கவில்லையாம்.

இந்தக் கலந்துரையாடலின் பின், சுதந்திரச் சபையின் எம்பிக்கள் 13 பேரும் சந்தித்துள்ளனர். புதிய கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி டலஸுக்கு கிடைக்கவே அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஷரித்த மாத்திரம் அதற்கு இணங்கவில்லையாம்.

இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவியைப் பெற்றுக்கொண்டு, ஐமச கூட்டணியில் இணைவதென்றே முடிவு கிடைத்துள்ளது. சிறப்பாகச் செயற்பட்டால், டலஸுக்கு பிரதமர் பதவிகூட கிடைக்க வாய்ப்புள்ளதென்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜேவிபியை இணைத்துக்கொள்ளாமல் விக்கிரமசிங்க ராஜபக்ஷ கூட்டணியைத் தோற்கடிக்க முடியாதென்ற நிலைப்பாட்டிலேயே டலஸ் இருந்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்தில் ஜேவிபியையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென்றே அவர் கூறுகிறார்.

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள எம்பி ஒருவர், “இவ்வாறாக எம்மால் முன்னோக்கி நகர முடியாது. ஒரு பதவிக்காக, ஏனைய எம்பிக்களுக்கு அநீதி இழைக்கப்படக்கூடாது. கட்சியைக் கலைத்துவிடுவதே சிறப்பு. அப்போது எவரும் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நெத் எஃப்எம் அன்லிமிட்டட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள டலஸின் சகாவான ஷரித்த ஹேரத், புதிய கதையொன்றைக் கூறியுள்ளார்.

2024ஆம் ஆண்டில் புதிய சவால்களுக்குப் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக சுதந்திர மக்கள் சபையின் பொதுச் செயலாளர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவர்கள் என்னதான் சொன்னாலும், டலஸின் சுதந்திரச் சபை உடைந்து சின்னாபின்னமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே, அக்கட்சியின் சிலர் தெரிவிக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி