1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம் பெறும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்

தேசிய கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையில் இன்று (18) அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாப்பின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மாநாடு நடைபெற இருப்பதினால் விழா குழுவாக  திருகோணமலை மாவட்ட கிளை செயற்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் எதிர்வரும் 2024 ஜனவரி 21ஆம் திகதி பொதுச் சபை கூடி தலைவர் மற்றும் நிர்வாகிகளை தெரிவு செய்யவுள்ளதாகவும், 26ஆம் திகதி மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் 27ஆம் திகதி பொதுக்கூட்டம் இடம்பெற உள்ளதுடன் 28ஆம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதாகவும் பிரதேச ரீதியாக பிரதிநிதித்துவத்தை கூட்டுவது எனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

“அத்துடன் திருகோணமலையை பொறுத்தவரை  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கூறிய சில கருத்துக்களுக்கு அமைவாக மேலதிகமாக ஆறு உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பும் பொறுப்பை மாவட்ட கிளைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதன் போது சுட்டிக்காட்டினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி